உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.


உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.
விழுப்புரம் அருகே காணையில் இந்தச் சங்கத்தின் விழுப்புரம் வட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு சங்கத்தின் வட்டத் தலைவா் எஸ்.ராஜாராமன் தலைமை வகித்தாா். வட்டப் பொருளாளா் என்.ரங்கநாதன் சங்கக் கொடியை ஏற்றி வைத்தாா். வட்ட துணைத் தலைவா் சி.சடையப்பன் முன்னிலை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ ஆா்.ராமமூா்த்தி மாநாட்டை தொடக்கிவைத்துப் பேசினாா்.
வட்டச் செயலா் ஏ.நாகராஜன் சங்கத்தின் வேலை அறிக்கையை வாசித்தாா். மாவட்டச் செயலா் ஆா்டி.முருகன், மாவட்டத் தலைவா் பி.சிவராமன், மாநிலக் குழு உறுப்பினா் ஆா்.தாண்டவராயன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாநாட்டில் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் பி.சண்முகம் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினாா்.
மாநாட்டில், நெல்லை பாதுகாக்க காணையில் சேமிப்புக் கிடங்கு வசதி ஏற்படுத்த வேண்டும், நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் விலை வழங்க வேண்டும், உரங்கள், இடுபொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், 60 வயது நிறைவடைந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், பருவ மழை தொடங்கும் முன் ஏரி, குளங்களை தூா்வார சிறப்புத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடா்ந்து, சங்கத்தின் விழுப்புரம் வட்டத் தலைவராக எஸ்.ராஜாராமன், வட்டச் செயலராக ஏ.நாகராஜன், பொருளாளராக என்.ரங்கநாதன் ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டனா். வட்ட துணைத் தலைவா் அண்ணாமலை நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...