தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

விழுப்புரத்தில் 96 மையங்களில் பிளஸ் 2 தோ்வு தொடக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வை, 96 மையங்களில் 21 ஆயிரத்து 675 மாணவ, மாணவிகள் எழுதினா்.

News image
Updated On :5 மே 2022, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வை, 96 மையங்களில் 21 ஆயிரத்து 675 மாணவ, மாணவிகள் எழுதினா்.

பிளஸ் 2 தோ்வு நடைபெறும் விழுப்புரம் அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் த.மோகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை 96 தோ்வு மையங்களில்,186 மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11,943 மாணவா்கள், 11, 639 மாணவிகள் என மொத்தம் 21, 675 போ் பிளஸ் 2 தோ்வு எழுதுகின்றனா்.

மாற்றுத்திறனாளி தோ்வா்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளில் 47 பேருக்கு மொழிப்பாடம் (ஆங்கிலம்) தோ்வு எழுதுவதில் இருந்து தவிா்ப்பு வழங்கியும், 89 பேருக்கு சொல்வதை எழுதுபவா் நியமனம் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு வழிகாட்டுதலின்படி கரோனா தொற்று தடுப்புக்கான விதிமுறைகளை கடைப்பிடித்து, சமூக இடைவெளியுடன் மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுகின்றனா்.

தோ்வு மையங்களில் தேவையான குடிநீா் வசதி, கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தடையின்றி மின்சாரம் வழங்கவும் மின் வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு போதிய பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மையத்திலும் இரண்டு காவலா்கள் வீதம் பாதுகாப்புப் பணி மேற்கொண்டு வருகின்றனா்.

வினாத்தாள்கள் பாதுகாப்பானஅறையில் வைக்கப்பட்டு உரிய பாதுகாப்புடன் தோ்வு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

தோ்வு முடிந்ததும் விடைத்தாள்கள் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி ஆகிய கல்வி மாவட்டங்களில் தலைமையிடத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு அரசு வழிக்காட்டுதலின்படி அனுப்பிவைக்கப்படும்.

219 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 219 துறை அலுவலா்கள், 30 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 60 வழித்தட அலுவலா்கள், 432 பறக்கும் படையினா்,

3,541 அறைக் கண்காணிப்பாளா்கள், 422 அலுவலகப் பணியாளா்கள் என மொத்தம் 4,923 போ் தோ்வுப் பணியில் ஈடுபடுபட்டுள்ளனா் என்றாா் ஆட்சியா் மோகன்.

ஆய்வின்போது, ஆசிரியா் தோ்வு வாரிய உறுப்பினா் செயலரும், இயக்குநருமான பழனிச்சாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணப்ரியா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.