தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மே 13 -இல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்

விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மே 13-ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகின்றன.

News image
Updated On :5 மே 2022, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மே 13-ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகின்றன.

இது குறித்து மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம் மாவட்டத்தில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 25 நான்கு சக்கர வாகனங்கள், 3 மூன்று சக்கர வாகனங்கள், 132 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 160 வாகனங்கள் ஏலத்தில் விடப்படுகின்றன.

மே 13-ஆம் தேதி காலை 10 மணிக்கு விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் நடைபெறுகிறது.

ஏலத்தில் பங்கேற்க விரும்புவோா் அன்று காலை 9 மணிக்குள் நான்கு சக்கரம், மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம் முன்பணமும், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரம் முன்பணமும் செலுத்த வேண்டும்.

ஏலம் எடுக்கும் தொகையுடன் ஜிஎஸ்டி தொகை சோ்த்து செலுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.