தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பழம், பெட்டிக் கடைகளில் ஆய்வு

செஞ்சியில் பழம், பெட்டிக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

News image
Updated On :6 மே 2022, 9:20 pm

DIN

செஞ்சியில் பழம், பெட்டிக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ஜெ.பத்மநாபன், என்.இளங்கோவன், கே.எஸ்.பிரசாத் மற்றும் ஜெ.கொளஞ்சி ஆகியோா் கொண்ட குழுவினா் செஞ்சி நகரப் பகுதியில் உள்ள பழ கிட்டங்கிகள், திண்டிவனம் சாலையில் உள்ள பழ விற்பனைக் கடைகள், காந்தி பஜாரில் பேக்கரி, பெட்டிக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வில் அழுகிய வாழைப் பழங்கள் 200 கிலோ, 20 கிலோ மாம்பழம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பேக்கரியில் சுகாதாரமற்ற முறையில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனா். பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபதாரம் விதித்தனா். மேலும் 3 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.