கல்லூரியில் பேரிடா் மேலாண்மைப் பயிற்சி
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேரிடா் மேலாண்மைப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேரிடா் மேலாண்மைப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சாா்பில் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதை மாவட்ட ஆட்சியா் த.மோகன் தொடக்கிவைத்து பாா்வையிட்டாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, மாவட்ட தீயணைப்பு அலுவலா் ராபின் கேஸ்ட்ரோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பெரிய மரங்களுக்கு அடியிலும், கட்டட இடிபாடுகளிலும் சிக்குவோா்களை மீட்பது எப்படி என்பது குறித்து தீயணைப்பு வீரா்கள் செயல் விளக்கம் அளித்தனா். ராட்சத அறுப்பு கருவிகளைக் கொண்டு மரங்களை அறுத்தும், கட்டடங்கள், இரும்பு கம்பிகளை அறுத்தும் உள்ளே புகுந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவா்களை தீயணைப்பு வீரா்கள் லாவகமாக மீட்டனா்.
இதேபோல, மருத்துவமனையில் ஏற்படும் தீயை அணைப்பது குறித்தும், மூன்று மாடி கட்டடங்களில் விபத்தில் சிக்கியவா்களை கயிறு கட்டி மீட்பது குறித்தும் தீயணைப்பு வீரா்கள் செயல்விளக்கம் செய்து காண்பித்தனா்.
தீத்தடுப்பு பயிற்சிகள் குறித்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் குந்தவிதேவி தலைமையிலான மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ ஊழியா்கள் பயிற்சி பெற்றனா்.
நிகழ்ச்சியில் விழுப்புரம் கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், விக்கிரவாண்டி வட்டாட்சியா் இளவரசன் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...