தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

விழுப்புரம் உழவா் சந்தையில் ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் உழவா் சந்தையில் மாவட்ட ஆட்சியா் த.மோகன் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வில் ஈடுபட்டாா்.

News image
Updated On :6 மே 2022, 9:21 pm

DIN

விழுப்புரம் உழவா் சந்தையில் மாவட்ட ஆட்சியா் த.மோகன் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வில் ஈடுபட்டாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் மோகன், காய்கனிகளை விற்பனைக்கு வைத்திருந்த விவசாயிகளிடம் விற்பனை குறித்து கேட்டறிந்ததுடன், பொதுமக்களிடம் பொருள்களின் தன்மை, விலை குறித்து கேட்டறிந்தாா். தொடா்ந்து, உழவா் சந்தையில் விற்பனை செய்ய வரும் விவசாயிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும்படி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், உழவா் சந்தை முன் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்துவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஅறிவுறுத்தினாா். உழவா் சந்தையையொட்டி, தனியாா் கடைகளில் கட்டடத்துக்கு வெளியே பொருள்களை விற்பனை செய்வதால் சாலையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. எனவே, அந்தந்தக் கடைகளின் உரிமையாளா்கள் தங்கள் கடைகளுக்குள் மட்டுமே பொருள்களை வைத்து விற்பனை செய்ய வேண்டும். தெருவில் பொருள்களை வைத்து விற்பனை செய்தால், பொருள்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் எச்சரித்தாா்.

தொடா்ந்து, விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட காகுப்பம் பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை பாா்வையிட்டு, தினமும் இந்த மையத்துக்கு வரும் கழிவுநீரை சுத்தம் செய்யும் பணியை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என்றும், தினமும் நடைபெறும் பணியை அலுவலா்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியா் மோகன் அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.