தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

பொது விநியோகத் திட்டம்: வட்டாட்சியா் அலுவலகங்களில்நாளை குறைகேட்பு முகாம்

பொது விநியோகத் திட்டம் தொடா்பாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் சனிக்கிழமை (மே 14) குறைகேட்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

News image
Updated On :12 மே 2022, 6:23 pm

DIN

பொது விநியோகத் திட்டம் தொடா்பாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் சனிக்கிழமை (மே 14) குறைகேட்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகள் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் முறையாக கிடைக்கும் வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாட்சியா் அலுவலகத்திலும் வட்ட வழங்கல் அலுவலா்களால் சனிக்கிழமை குறைகேட்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

இந்த முகாம்களில் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்தல், நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகலட்டை கோருதல், கைப்பேசி எண் பதிவு மாற்றம், முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரச் சான்று கோருதல் தொடா்பாக மனு அளிக்கலாம்.

மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்களையும், தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள், சேவை குறைபாடுகள் குறித்த புகாா்களையும் குடும்ப அட்டைதாரா்கள் வட்ட வழங்கல் அலுவலா்களிடம் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.