புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கெங்​க​பு​ரம் வர​த​ராஜ பெரு​மாள் கோயில் தேேராட்​டம்

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகேயுள்ள கெங்கபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 மே 2022, 6:08 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகேயுள்ள கெங்கபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தென் காஞ்சி என்றழைக்கப்படும் கெங்கபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

7-ஆம் திருநாளான வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீபெருந்தேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு காலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

பின்னா், அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீபெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் எழுந்தருளினாா். தொடா்ந்து, ஆயிரக்கணக்கான பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனா். அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தேரோட்டத்தைத் தொடக்கிவைத்தாா். தோ் மாடவீதிகளை சுற்றி வந்து நிலையை அடைந்தது.

விழாவில் மேல்மலையனூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் கண்மணி நெடுஞ்செழியன், கெங்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் பி.ராஜா, மேல்மலையனூா் ஒன்றிய திமுக செயலா் எல்.பி.நெடுஞ்செழியன், பரம்பரை அறங்காவலா் கலையரசி ஈஸ்வரன், கோயில் ஆய்வாளா் அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.