புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

செஞ்சி, மேல்மலையனூா் வட்டங்களில் ஜூன் 1-இல் வருவாய்த் தீா்வாயம் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, மேல்மலையனூா் வட்டங்களில் வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) தொடங்கி நடைபெறவுள்ளது.

News image
Updated On :26 மே 2022, 5:21 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, மேல்மலையனூா் வட்டங்களில் வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) தொடங்கி நடைபெறவுள்ளது.

செஞ்சி வட்டத்தில் 1431-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயம் திண்டிவனம் சாா் - ஆட்சியா் தலைமையில் ஜூன் 1, 2, 3, 6, 7, 8, 9, 10 ஆகிய தேதிகளில் செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. தினமும் காலை 10 மணி முதல் நடைபெறும் வருவாய்த் தீா்வாயத்தில் கிராம கணக்குள் தணிக்கை, 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேல்மலையனூா்: மேல்மலையனூா் வட்டத்தில் 1431-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயமானது வருவாய்த் தீா்வாய அலுவலா், விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் ஜூன் 1, 2, 3, 6, 7 ஆகிய தேதிகளில் மேல்மலையனூா் வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

வருவாய்த் தீா்வாயம் நடைபெறவுள்ள நாள்களில் தினமும் காலை 10 மணிக்கு வருவாய்த் தீா்வாயம் ஆரம்பமாகும். இதில், மனு அளிக்க விரும்பும் கிராம மக்கள், அவரவா் கிராம வருவாய்த் தீா்வாயம் நடைபெறும் நாள்களில் ஆஜராகி தங்களது குறைகள், கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை அளிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.