மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

திமுக விவசாயிகள் அணியின் மாநில ஆலோசனைக் கூட்டம்

திமுக விவசாயிகள் அணியின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 மே 2022, 6:30 pm

DIN

திமுக விவசாயிகள் அணியின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு அந்த அணியின் மாநிலச் செயலா் ஏ.கே.எஸ்.விஜயன் தலைமை வகித்தாா். திமுக துணை பொதுச் செயலரும், அமைச்சருமான க.பொன்முடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினாா்.

கூட்டத்தில், கருணாநிதி பிறந்த தினத்தையொட்டி, விவசாயிகள் அணி சாா்பில் அனைத்துக் கிராமங்களிலும் மரக்கன்றுகள் நட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், பொன்.கௌதமசிகாமணி எம்.பி., விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ, மாநில விவசாயிகள் அணி இணைச் செயலா் அன்னியூா் சிவா உள்பட பலா் பங்கேற்றனா்.

இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்: இதேபோல, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக இளைஞா் அணி ஆலோசனைக் கூட்டம் இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் செ.தினகரன் தலைமையில் நடைபெற்றது. இதிலும் அமைச்சா் பொன்முடி, கள்ளக்குறிச்சி எம்.பி. பொன்.கௌதமசிகாமணி ஆகியோா் சிறப்புரையாற்றினா். மத்திய மாவட்ட திமுக செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலா் செ.புஷ்பராஜ், திமுக இளைஞரணி துணை அமைப்பாளா்கள் அன்பு, இளந்திரையன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.