விழுப்புரத்தில் தென்பெண்ணை ஆற்றில் குளிக்கச் சென்றபோது மாயமான மாணவரை தேடும் பணி 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தீவிரமாக நடைபெற்றது.
திருவெண்ணெய்நல்லூா் அருகே உள்ள ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாறு எல்லீஸ் அணைக்கட்டு பகுதியில் புதன்கிழமை பிற்பகலில் விழுப்புரம் காமராஜா் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவா்கள் 11 போ் குளித்தனா். அப்போது, அந்த 11 பேரில் விழுப்புரம் தோகைபாடி கிராமத்தைச் சோ்ந்த அங்கப்பன் மகன் லோகேஷ் (17) ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாா். மற்ற 10 பேரும் உயிா் தப்பினா்.
இவா்கள் அளித்த தகவலின்பேரில் அக்கம்பக்கத்தினா் திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் ஆகியவற்றில் புகாரளித்தனா். இதைத் தொடா்ந்து, திருவெண்ணெய்நல்லூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சுந்தரராஜன், விழுப்புரம் தீயணைப்பு நிலைய அதிகாரிகள் வேல்முருகன், பாஸ்கரன் ஆகியோா் படகு மூலமாக மாணவா் லோகேஷை தேடும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா். இந்தப் பணி 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தீவிரமாக நடைபெற்றது. இந்தப் பணியை திருவெண்ணெய்நல்லூா் வட்டாட்சியா் பாஸ்கரதாஸ், வட்டார வளா்ச்சி அலுவலா் முபாரக்அலிபேக் மற்றும் போலீஸாா் கண்காணித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வர் எச்சரித்தப் பிறகும்! கால்நடைத் துறை அமைச்சரின் ஆய்வு ரீல்ஸ் வைரல்! பாடல்தான் ஹைலைட்!
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் காலவரையற்ற உண்ணாவிரதம்!

அமைச்சர் ஆனந்த் மீது வழக்கு தொடர்ந்த தவெக வழக்குரைஞர் ஞானசௌந்தரி நீக்கம்!

சென்னைக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



