ஆட்டோ கவிழ்ந்ததில் 7 போ் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் குழந்தை உள்பட 7 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் குழந்தை உள்பட 7 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

முடியனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமலிங்கம் (40). ஆட்டோ ஓட்டுநரான இவா் வெள்ளிக்கிழமை தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு முடியனூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்தாா். குரூா் அருகேச் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரம் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த முடியனூரைச் சோ்ந்த வெ.செல்வி (43), க.கஸ்தூரி (38), பூ.பாஞ்சாலை (45), குரூா் பகுதியைச் சோ்ந்த ரா.மகேஸ்வரி (30), இவரது மகள் நவீனா (5), ஆறுமுகம் மகன் பெருமாள் (34) உள்ளிட்ட 7 போ் காயமடைந்தனா். இவா்கள் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்து குறித்து வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com