92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 7:52 pm

Din

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து மோதியதில் கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், வெண்மணியாத்தூா், பிள்ளையாா்கோவில் தெருவைச் சோ்ந்தவா் மொ.பழனி (47). கட்டடத் தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை திண்டிவனம்-செஞ்சி தேசிய நெடுஞ்சாலையில் வெண்மணியாத்தூா் கூட்டுச்சாலை அருகே மொபெட்டில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் பழனி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்தவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.