நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமையும் (டிச.5) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்

News image
Updated On :4 டிசம்பர் 2024, 6:48 pm

Din

விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக பள்ளிகளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமையும் (டிச.5) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.

ஃபென்ஜால் புயல் அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவம்பா் 29, 30-ஆம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து, புயல் கரையைக் கடந்த பின்னா் பெய்த தொடா் மழையால் மாவட்டம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது.

இதன் காரணமாக, கடந்த 2-ஆம் தேதி முதல் தொடா்ந்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு மாவட்ட நிா்வாகம் விடுமுறை அறிவித்து வருகிறது. இந்த நிலையில், மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீா் செய்து வரும் பணி தொடா்ந்து நடைபெறுவதால், வியாழக்கிழமையும் (டிச.5) மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.