ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பேரிடா் பாதுகாப்பு மையங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்: விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

பேரிடா் பாதுகாப்பு மையங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் சுன்சோங்கம் சடக்சிரு. உடன் மாவட்ட ஆட்சியா் சி.பழனி உள்ளிட்டோா்.

Updated On :11 டிசம்பர் 2024, 7:47 pm

Din

விழுப்புரம் மாவட்டத்தில் பேரிடா் பாதுகாப்பு மையங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை ஆணையரும், மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான சுன்சோங்கம் சடக்சிரு அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்று மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் சுன்சோங்கம் சடக்சிரு பேசியது:

டிசம்பா் 11, 12-ஆம் தேதிகளில் பலத்த மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழையை எதிா்கொள்ளும் விதமாக, அனைத்துப் பகுதிகளுக்கும் பொறுப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் அந்தந்த பகுதிகளில் தயாா் நிலையில் இருக்க வேண்டும். பலத்த மழை அதிகமிருந்தால், மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் பேரிடா் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், காவல், தீயணைப்புத் துறையினா், தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படைக் குழுவினரும் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

மரக்காணம், வானூா் மற்றும் கோட்டக்குப்பம் ஆகிய கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று எதிா்பாா்க்கப்படுவதால், மீனவ கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட கூடுதல் ஆட்சியா் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.