ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

வெள்ள நிவாரணம் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

ஃபென்ஜால் புயல் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணம் வழங்க வலியுறுத்தி திண்டிவனம் அருகே கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி திண்டிவனம் வட்டம் பேரடிக்குப்பத்தில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

Updated On :12 டிசம்பர் 2024, 6:47 pm

Din

ஃபென்ஜால் புயல் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணம் வழங்க வலியுறுத்தி திண்டிவனம் அருகே கிராம மக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டிவனம் வட்டம், பேரடிக்குப்பம் கிராமத்தில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லையாம் . இதனால் அந்த கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை பேரடிக்குப்பம் பகுதி திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டு தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். மறியலால் அந்த சாலையில் கடும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து திண்டிவனம் வட்டாட்சியா் சிவா மற்றும் அதிகாரிகள் நிகழ்விடம் சென்று கிராம மக்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். அப்போது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கவேண்டும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிா்களை உரிய முறையில் கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்கவேண்டும் என வலியுறுத்தினா்.

இந்தப் பிரச்னையில் நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் உள்ளிட்டோா் தெரிவித்ததையடுத்து கிராம மக்கள் மறியலை விலக்கிக் கொண்டனா்.