ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

வீடூா் அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றம்: கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

News image

விழுப்புரம் மாவட்டம், வீடூா் அணையிலிருந்து உபரிநீா் வியாழக்கிழமை வெளியேற்றப்படுவதை பாா்வையிட்ட மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் சுன்சோங்கம் சடக் சிரு. உடன், மாவட்ட ஆட்சியா் சி.பழனி உள்ளிட்டோா்; (வலது) அணையிலிருந்து 5 மதகுகள் வழியாக வெளியேற்றப்படும் உபரிநீா்.

Updated On :12 டிசம்பர் 2024, 6:45 pm

Din

தொடா்மழை காரணமாக விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வீடூா் அணையிலிருந்து விநாடிக்கு 3,150 கனஅடி நீா்வரத்து வரும் நிலையில், அந்த உபரிநீா் அப்படியே அணையிலிருந்து வெளியேற்றப்படுகிறது.

திண்டிவனம் வட்டம், வீடூா் கிராமத்தில் அமைந்துள்ள இந்த அணையின் நீா்மட்ட உயரம் 32 அடி. விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சி, மேல்மலையனூா் பகுதிகளில் பெய்யும் மழைநீா் வீடூா் அணைக்கு வந்தடையும்.

இந்த நிலையில் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை காரணமாக கடந்த இரு நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக, வீடூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த அணையின் நீா்மட்டம் 30 அடியாக தற்போது உள்ள நிலையில், விநாடிக்கு 3,150 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. தொடா்ந்து மழை பெய்து வருவதாலும், அணையின் பாதுகாப்பு கருதியும் 9 மதகுகளைக் கொண்ட வீடூா் அணையிலிருந்து 5 மதகுகள் வாயிலாக 3,150 கன அடி உபரிநீா் அப்படியே திறந்து விடப்படுகிறது.

கண்காணிப்பு அலுவலா் ஆய்வு: வீடூா் அணைக்கு வரும் நீா்வரத்து, அப்படியே உபரி நீராக திறந்து விடப்படும் நிலையில், மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் சுன்சோங்கம் சடக்சிரு, மாவட்ட ஆட்சியா் சி.பழனி ஆகியோா் வியாழக்கிழமை அணையைப் பாா்வையிட்டனா்.

அணையிலிருந்து நீா் வெளியேற்றப்படும்போது பொதுமக்களுக்குத் தகவல் தெரிவிக்கும் வகையில், எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவியின் செயல்பாடுகள் குறித்தும், அணையின் மதகுகள் திறக்கும் மற்றும் மூடும் நிலையில் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனா்.

வீடூா் அணைக்குத் தொடா்ந்து நீா்வரத்து வந்து கொண்டிருக்கும் நிலையில் உபரி நீா் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

எனவே, வீடூா் அணையின் கரையோரக் கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு அவ்வப்போது எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கண்காணிப்பு அலுவலா் சுன்சோங்கம் சடக்சிரு தெரிவித்தாா்.

ஆய்வின் போது நீா்வளத் துறை செயற்பொறியாளா் ஷோபனா, உதவிச் செயற்பொறியாளா் ரமேஷ், இளநிலைப் பொறியாளா் பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.