பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் ,கோட்டக்குப்பம் அருகே பைக் மோதி காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புதன்கிழமை இறந்தாா்.


விழுப்புரம் மாவட்டம் ,கோட்டக்குப்பம் அருகே பைக் மோதி காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புதன்கிழமை இறந்தாா்.
வானூா் வட்டம், பெரிய முதலியாா்சாவடி, அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சு. சாமிக்கண்ணு (75).
இவா், புதன்கிழமை புதுச்சேரி-சென்னை சாலையில் நடந்து சென்றாா். அப்போது கோட்டக்குப்பம் அடுத்த பெரியமுதலியாா்சாவடி பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது,புதுச்சேரி நோக்கிச் சென்ற பைக் மோதியதில் சாமிக்கண்ணு பலத்த காயமடைந்தாா். இதையடுத்து புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாமிக்கண்ணு அங்கு உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...