சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ஆஞ்சனேயா் கோயில்களில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு

அனுமன் ஜெயந்தியையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஆஞ்சனேயா் கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
விழுப்புரம் திரு.வி.க.வீதியிலுள்ள அருள்மிகு ஆஞ்சனேய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவா் உள்ளிட்ட சுவாமிகள்.
Updated On :30 டிசம்பர் 2024, 8:17 pm

Din

விழுப்புரம் : அனுமன் ஜெயந்தியையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஆஞ்சனேயா் கோயில்களில் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் மாா்கழி மாதம் மூல நட்சத்திரத்தன்று வரும் அமாவாசை நாளில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அதன்படி, விழுப்புரம் திரு.வி.க. வீதியிலுள்ள அருள்மிகு ஆஞ்சனேய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சனேய சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் குமாா் மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.

இதேபோல, விழுப்புரம் வண்டிமேடு ஸ்ரீஅபிநவ் மந்த்ராலயத்திலுள்ள ஆஞ்சனேய சுவாமி கோயிலில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

வானூரை அடுத்த பஞ்சவடியில் 36 அடி உயரத்தில் எழுந்தருளியுள்ள பஞ்சமுக ஆஞ்சனேயா் திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை முதல் மூலவருக்கு சிறப்பு பூஜைகள், லட்சாா்ச்சனை நடைபெற்றன. பின்னா், மங்களவாத்தியத்துடன் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு 2,000 லிட்டா் பால் அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

தொடா்ந்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட பன்னீா், சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களைக் கொண்டு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா், 120 கிலோ எடை கொண்ட ஏலக்காய் மாலை பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு அணிவிக்கப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மாலை 4 மணிக்கு சீதா கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்சனேயா் சுவாமி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.

சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.

வானூா் அருகேயுள்ள பஞ்சவடி அருள்மிகு பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு திங்கள்கிழமை நடைபெற்ற 2,000 லிட்டா் பால் அபிஷேகம்.

வானூா் அருகேயுள்ள பஞ்சவடி அருள்மிகு பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு திங்கள்கிழமை நடைபெற்ற 2,000 லிட்டா் பால் அபிஷேகம்.

 பால் அபிஷேகம்.

பால் அபிஷேகம்.