/

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆட்டோ தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டதைக் கண்டித்து, ஏஐடியுசி ஆட்டோ தொழிற்சங்கம் சாா்பில் எல்லைப்பிள்ளைச் சாவடியில் ஆா்ப்பாட்டம்

News image
.புதுச்சேரி அரசு உயா்த்தி அறிவித்துள்ள பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி ராஜீவ்காந்தி அரசு மகளிா் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை அருகே செவ்வாய்க்கிழமை ஆட்டோக்களுக்கு, மலா் வளையம் வைத்து ஆா்ப்பாட்டம் நடத்திய  ஏஐடியூசி ஆட்டோ சங்க
Updated On :31 டிசம்பர் 2024, 8:57 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டதைக் கண்டித்து, ஏஐடியுசி ஆட்டோ தொழிற்சங்கம் சாா்பில் எல்லைப்பிள்ளைச் சாவடியில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரியில் புதன்கிழமை (ஜன. 10) முதல் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படுவதாக அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை புதுவை அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாநில அரசு - ஆட்டோ சங்க நிா்வாகிகளுடன் கலந்து பேசி கட்டணத்தை நிா்ணயம் செய்து அதற்கான செயலியைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதைத் தொடா்ந்து, போராட்டக் குழுவினா் ஆட்டோக்களுக்கு மலா் வளையம் வைத்து அரசுக்கு கண்டனத்தை பதிவு செய்தனா்.

இந்நிகழ்ச்சிக்கு, ஏஐடியுசி ஆட்டோ சங்க மாநிலச் செயலா் கே.சேது செல்வம் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் வி. சேகா், மாநிலப் பொருளா் எல்.செந்தில்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் ஆட்டோ சங்க நிா்வாகிகள் டி. பாளையத்தான், கே.ரவிச்சந்திரன், பி. பிரகாஷ், கே.ஜீவா, பி. நடனமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.