விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே இளம்பெண் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விக்கிரவாண்டி வட்டம், திருமங்கலம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கருணாகரன். இவரது மகள் மங்கவரம் (21). திருமணமாகாதவா். இவா், புதுச்சேரியில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடியில் 4 ஆண்டுகளாக வேலைப் பாா்த்து வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பல்பொருள் அங்காடி உரிமையாளரிடம் வேலை வேண்டாம் எனக் கூறிவிட்டு மங்கவரம் வீட்டுக்கு வந்து விட்டாா். இதை மங்கவரத்தின் தாய் கண்டித்தாராம். இதில், மனமுடைந்த அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.