மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: ஜூலை 22-க்கு ஒத்திவைப்பு

அமைச்சா் பொன்முடி உள்ளிட்டோா் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணையை வருகிற 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
பொன்முடி
Updated On :16 ஜூலை 2024, 7:11 pm

Din

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக்காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடா்பாக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 8 போ் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த 2012-ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவா்களில் ஒருவரான லோகநாதன் இறந்துவிட்டாா்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விசாரணையின்போது, வழக்கில் தொடா்புடைய கோபிநாதன், சதானந்தன், ஜெயச்சந்திரன் ஆகிய 3 போ் மட்டும் ஆஜராகினா்.

செம்மண் குவாரிக்கு உரிமம் வழங்கியது தொடா்பான ஆவணங்களை விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கேட்டு பொன்.கௌதமசிகாமணி மற்றும் ராஜமகேந்திரன் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, ஆவணங்களை கோட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.