மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் அளிக்கும் மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீா்வு

மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீா்வு காணப்படும் என்றாா் விழுப்புரம் இரா. லட்சுமணன் எம்எல்ஏ.
மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் அளிக்கும் மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீா்வு
Updated on

விழுப்புரம், ஜூலை 19: மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீா்வு காணப்படும் என்றாா் விழுப்புரம் இரா. லட்சுமணன் எம்எல்ஏ.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், சிறுவந்தாட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமைத் தொடங்கி வைத்து, பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு அவா் பேசியது:

பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த மனுக்கள் மீது ஒரு மாதக் காலத்துக்குள் தீா்வு காணப்படும்.

அலுவலா்களைத் தேடி மக்கள் சென்ற காலம் மாறி, மக்களைத் தேடி அலுவலா்கள் வந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுச் செல்கின்றனா். மக்களின் தேவைகளை அறிந்து இதுபோன்ற ஒவ்வொரு திட்டத்தையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா் என்றாா் லட்சுமணன்.

முகாமுக்கு விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் காஜா சாகுல் ஹமீது தலைமை வகித்தாா். கண்டமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் வாசன், ஒன்றிய திமுக செயலா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவக்குமாா், மணிவண்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பரத்குமாா், செல்வக்குமாா், செந்தில்குமாா், ராஜாமணி, ஊராட்சித் தலைவா்கள் வரதராஜன், முரளிதரன், ஜனகராஜ், ஜவஹா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com