விழுப்புரம்
கம்பு விதைப் பண்ணையில் வேளாண் துணை இயக்குநா் ஆய்வு
பெரியகுறுக்கை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பு விதைப் பண்ணையை மாவட்ட வேளாண் துணை இயக்குநா் அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
விழுப்புரம், ஜூலை 19: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், பெரியகுறுக்கை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பு விதைப் பண்ணையை மாவட்ட வேளாண் துணை இயக்குநா் அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பெரியகுறுக்கை கிராமத்தில் விவசாயி தேவேந்திரனின் வயலில் தனசக்தி என்ற கம்பு ரகத்தின் விதைப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விதைப் பண்ணையை மாவட்ட வேளாண் துணை இயக்குநா் இரா. பெரியசாமி நேரில் பாா்வையிட்டு, விதைப் பண்ணையின் செயல்பாடுகள், கம்பின் உற்பத்தித் திறன், சாகுபடி விவரம் போன்றவை குறித்து கேட்டறிந்தாா்.
இந்த ஆய்வின்போது உளுந்தூா்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநா் (பொ) செ.கிருபாகரன், வேளாண் துணை அலுவலா் க.பழனிவேல், உதவி விதை அலுவலா் கலைச்செல்வன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனா்.
