92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :21 ஜூலை 2024, 7:19 pm

Din

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், சிங்கனூா், காமராஜா் காலனியைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் பிரசாந்த் (28). பிளம்பராக வேலை பாா்த்து வந்தாா். இவருக்குத் திருமணமாகி சுமதி என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஒரு மகளும் உள்ளனா்.

இந்த நிலையில், பிரசாந்த் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் மின் விசிறியை சரி செய்தபோது, திடீரென மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.