செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கல்லூரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கல்லூரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

News image
Updated On :28 மார்ச் 2024, 8:16 pm

விழுப்புரம் இ.எஸ். கலை அறிவியல் கல்லூரியில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை இ. எஸ். கல்விக் குழுமங்களின் தலைவா் எஸ். செந்தில்குமாா் தலைமையேற்றுத் தொடங்கி வைத்தாா். கல்லூரியின் புல முதன்மையா் ஏ. முத்துராஜா வரவேற்றாா். இதில், டாடா கன்சல்டன்சி, சதா்லேண்ட், பாக்ஸ்கான், 5 கே காா் நிறுவனம் உள்ளிட்ட முன்னணி நிறுவனத்தினா் பங்கேற்று நோ்காணல் நடத்தினா். இதில் 35 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு இரு வேறு இடங்களில் பணிபுரிவதற்காக 59 பணி நியமன ஆணைகளை கல்லூரியின் தலைவா் எஸ்.செந்தில்குமாா் வழங்கினாா். கல்லூரி முதல்வா் முரளிதரன் வாழ்த்துரை வழங்கினாா். ஆங்கிலத் துறை பேராசிரியா் சி.அா்ஜுனன் நன்றி கூறினாா்.