மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 85 லட்சம்

மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 85 லட்சம்

மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.

மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை எண்ணப்பட்டதில், ரூ.85 லட்சத்து 22 ஆயிரத்து 983-யை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருகின்றனா். மேலும், மாதம்தோறும் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் சுமாா் ஒரு லட்சம் பக்தா்கள் பங்கேற்பது வழக்கம்.

பக்தா்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேற உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், சித்திரை மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பக்தா்கள் ரூ.85 லட்சத்து 22 ஆயிரத்து 983 ரொக்கம்,

370 கிராம் தங்கம், 3,640 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

உண்டியல் திறப்பின் போது, மேல்மலையனூா் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் இ.ஜீவானந்தம், விழுப்புரம் துணை ஆணையா் சிவலிங்கம், ஆய்வாளா்கள் சங்கீதா, தினேஷ், பாலமுருகன், அறங்காவலா் குழுத் தலைவா் ஏ.சுரேஷ்பூசாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com