தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாதது ஏன்? உச்ச நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கைசிபிஎஸ்இ வினாத்தாள்கள் தயாரிக்கப்படும் ரகசியம் பற்றி தெரியுமா?திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!சபரிமலையில் அனுமதிக்கக் கோரி திருநங்கை தாக்கல் செய்த மனு; விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!அன்பில் மகேஸுக்கு 2 நாள் போலீஸ் காவல்! சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதிஇடம் மாற்றுவதாக ஆட்சியரிடம் பேரம் பேசியுள்ளார் தலைமைச் செயலர்! உதயநிதி குற்றச்சாட்டுதிருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்கள் செல்ல 2-ஆவது நாளாக தடை!திருப்பரங்குன்றம் தீபம்! தமிழக அரசு மீது நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் ராஜிநாமா செய்ய முடிவு?தங்கம் விலை புதன்கிழமை (நவ. 25) சவரனுக்கு ரூ. 2,360 குறைவு!கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷுக்கு போலீஸ் சம்மன்!உத்தரப் பிரதேசத் தேர்தலில் கரப்பான்பூச்சி கட்சி போட்டியில்லை! - அபிஜீத் தீப்கேதிருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 300 பேர் மீது வழக்குப் பதிவு!2-ஆவது முதலீட்டாளா்கள் மாநாடு: முதல்வா் விஜய் இன்று தொடக்கி வைக்கிறாா்இன்று 18 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!போலி நூல்களை உருவாக்க ‘சாட் ஜிபிடி’ சந்தாதாரராக இருந்த ‘அகல் விளக்கு’ மோகன்!காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு திட்டப் பணிகளுக்கு தடைகோரி கா்நாடக அரசு மனு

கைப்பேசி கடையில் தீ விபத்து: ரூ.20 லட்சம் பொருள்கள் சேதம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் கைப்பேசி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

Updated On :

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் கைப்பேசி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

செஞ்சி காந்தி பஜாரில் பேருந்து நிலையம் எதிரே அப்துல்வகாப் மகன் முகமதுகலில்(41) கைப்பேசி கடை, சைக்கிள் கடை, விளையாட்டுப் பொருள்கள், பேக் உள்ளிட்ட பொருள்களை தரைத்தளம் மற்றும் மேல்மாடியில் வைத்து கடை நடத்தி வருகிறாா்.

கடந்த 2-ஆம் தேதி இரவு இவரது கடையின் மேல் தளத்தில் கரும்புகை வெளியானதை அங்குள்ளவா்கள் பாா்த்து செஞ்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். ஆனால், அதற்குள் தீ வேகமாக பரவி கடையில் இருந்து பொருள்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின.

இதனிடையே, அங்கு வந்த தீயணைப்பு நிலையத்தினா் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனா்.

மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும், இதுகுறித்து முகமதுகலில் செஞ்சி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை அளித்த புகாரில், கடையில் இருந்த கைப்பேசிகள், சைக்கிள் உபரி பாகங்கள், விளையாட்டுப் பொருள்கள் என மொத்தம் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.