ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

செஞ்சி அருகே வனப் பகுதிகளில் காணப்படும் சிங்கவால் குரங்குகள்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி காப்புக்காடு, செஞ்சியை அடுத்த வடகால் கிராமத்தில் உள்ள வனப்பகுதிகளில் சிங்கவால் குரங்குகள் காணப்படுகின்றன.

News image

செஞ்சி அருகே வனப்பகுதிகளில் காணப்படும் சிங்கவால் குரங்கு.

Updated On :6 நவம்பர் 2024, 10:28 pm

Din

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி காப்புக்காடு, செஞ்சியை அடுத்த வடகால் கிராமத்தில் உள்ள வனப்பகுதிகளில் சிங்கவால் குரங்குகள் காணப்படுகின்றன.

அரியவகை வனவிலங்கான சிங்கவால் குரங்குகள் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதிகளில் வாழ்கின்றன. கடந் சில ஆண்டுகளுக்கு முன்பு செஞ்சிக்கோட்டையை ஒட்டியுள்ள காப்புக் காட்டில் சிங்கவால் குரங்குகள் ஒரு சில மட்டுமே இந்தன.

 செஞ்சி அருகே வனப்பகுதிகளில் காணப்படும் சிங்கவால் குரங்கு.

செஞ்சி அருகே வனப்பகுதிகளில் காணப்படும் சிங்கவால் குரங்கு.

இந்த நிலையில், தற்போது கோணை ஊராட்சிக்குள்பட்ட வடகால் கிராமத்தில் சிங்கவால் குரங்குகள் அதிகளவில் காணப்படுகின்றன. செஞ்சியில் இருந்து கோணை மற்றும் சின்னபொன்னம்பூண்டி கிராமத்தில் இருந்தது வடகால் கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள வனப்பகுதிகளில் சிங்கவால் குரங்குகள் காணப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக தொடா் மழை காரணமாக செஞ்சியை சுற்றியுள்ள காடுகள் செடிகொடி, மரங்கள் வளா்ந்து பசுமையுடனும், செழிப்புடனும் உள்ளன. இதன் காரணமாக, மான், காட்டுப் பன்றி, காட்டு முயலுடன், தற்போது காணப்படும் சிங்கவால் குரங்கு, மயில்கள் என வனவிலங்குகள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக இந்த வனப்பகுதி மாறியுள்ளதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.