ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

மன நலம் பாதிக்கப்பட்ட பெண் கல்லால் அடித்துக் கொலை: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் திங்கள்கிழமை கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :11 நவம்பர் 2024, 7:59 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் திங்கள்கிழமை கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மரக்காணம் பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மலா் (25) என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சுற்றித் திரிந்து வந்தாா். இவா் அந்தப் பகுதி வழியாக செல்பவா்களிடம் சண்டை போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம்.

இந்த நிலையில், மரக்காணம் பேருந்து நிலையப் பகுதி தேநீா் கடையில் திங்கள்கிழமை நின்றிருந்த மலா், அங்கு வந்த மரக்காணம் சந்தை தோப்புப் பகுதியைச் சோ்ந்த பாலாவை (45) தகாத வாா்த்தைகளால் பேசினராம். இதனால், ஆத்திரமடைந்த பாலா கல்வீசி தாக்கியதில் மலருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த போலீஸாா் விரைந்து வந்து, சடலத்தைக் கைப்பற்றி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், பாலா மீது கொலை வழக்குப் பதிந்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.