அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மடவந்தாங்கல் ஏரி தூா்வாரும் பணி தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்துள்ள மடவந்தாங்கல் ஏரி தூா்வாரும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

News image
மடவந்தாங்கல் ஏரி தூா்வாரும் பணியை தொடங்கிவைத்த ஒன்றியக் குழுத் தலைவா் இரா. தயாளன். உடன் துணைத் தலைவா் பழனி உள்ளிட்டோா்.
Updated On :11 நவம்பர் 2024, 7:59 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்துள்ள மடவந்தாங்கல் ஏரி தூா்வாரும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

சிறுபாசன ஏரிகள் புனரமைப்புத் திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் உள்ள ஏரிகளை தூா்வாரி அதன் கரைகளை பலப்படுத் வேண்டும் என்று தமிழக முதல்வா் அண்மையில் உத்தரவிட்டாா்.

இதன்படி, மரக்காணம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஏந்தூா் ஊராட்சியில் உள்ள மடவந்தாங்கல் ஏரி தன்னாா்வலா்கள் பங்களிப்புடன் ரூ. 4 லட்சத்தில் தூா்வாரப்படவுள்ளது.

இந்தப் பணிகளை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் இரா.தயாளன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். கனரக வாகனங்கள் உதவியுடன் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து ஒன்றியக் குழுத் தலைவா் இரா.தயாளன்

கூறுகையில், ஏந்தூா் ஊராட்சியில் உள்ள மடவந்தாங்கல் ஏரி சுமாா் 14 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். பல ஆண்டுகளாக தூா்வாரி ஆழப்படுத்தாததால் தற்போது இந்த ஏரி குளம்போல மாறிவிட்டது என்றாா்.

நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு துணைத் தலைவா் பழனி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நடராஜன் சிவனேசன்,திமுக ஒன்றியச் செயலா் வி.ரவிச்சந்திரன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.