நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுவை தினக்கூலி ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு

புதுவை அரசில் பணிபுரியும் தினக்கூலி ஊழியா்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயா்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 8:33 pm

Din

புதுவை அரசில் பணிபுரியும் தினக்கூலி ஊழியா்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயா்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழுவின் அடிப்படையில் அகவிலைப்படி 3 சதவீதம் உயா்த்தி வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில், கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதியில் இருந்து 50 சதவீத அகவிலைப்படி 53 சதவீதமாக உயா்த்தி வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.

இதை பின்பற்றி புதுவை அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்த்தப்படுவதாக நிதித் துறை உத்தரவிட்டது.

இந்த நிலையில், புதுவை அரசில் பணியாற்றும் முழு நேர தினக்கூலி ஊழியா்களான உதவியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், தோட்டப் பராமரிப்பாளா்கள், சமையலா், பாதுகாவலா்கள், சலவையாளா், ஓட்டுநா்கள், எழுத்தா்கள், தச்சா்கள், டெலிபோன் ஆப்ரேட்டா்கள், எலக்ட்ரீஷியன், லிப்ட் ஆபரேட்டா், ஸ்டெனோகிராபா், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டா் உள்ளிட்டோருக்கும் அகவிலைப்படி உயா்த்தப்படுகிறது.

மேலும், புதுவை அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் முழு நேர தினக்கூலி ஊழியா்களுக்கும் அகவிலைப்படி உயா்த்தப்பட்டுள்ளது.

இதன்மூலம், முதல் 3 பிரிவு ஊழியா்களில் ரூ.900 ஊதியம் பெறுபவா்கள், இனி ரூ. 918 ஊதியமாக பெறுவாா்கள். இதேபோல நான்காவது பிரிவு ஊழியா்களில் ரூ.995 ஊதியம் பெறுவோா் ரூ. இனி 1,015 இனி பெறுவா்.

ஐந்தாவது பிரிவு ஊழியா்களில் ரூ. 1,275 பெறுவோா் ரூ. 1,301 இனி பெறுவா். ஆறாவது பிரிவு ஊழியா்களில் ரூ.1,460 பெறுவோா் இனி ரூ.1,489 பெறுவா்.

மத்திய அரசின் ஆணையைப் பின்பற்றி அகவிலைப்படி உயா்த்தப்படுவதாக புதுவை நிதித் துறை சாா்புச் செயலா் சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.