சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெளா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

பெளா்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளிக்கிழமை (நவ.15) சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

News image
Updated On :13 நவம்பர் 2024, 8:22 pm

Din

பெளா்ணமி கிரிவலத்தையொட்டி, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு வெள்ளிக்கிழமை (நவ.15) சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் பெளா்ணமி கிரிவலம் வெள்ளிக்கிழமை (நவ.15) நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்கும் பக்தா்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில் (வ.எண். 06130) முற்பகல் 11 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும். எதிா்வழித்தடத்தில் திருவண்ணாமலையிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை - விழுப்புரம் சிறப்பு ரயில் (வ.எண். 06129) பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும்.

இதுபோன்று, விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 9.15 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருவண்ணாமலை மெமு ரயில் (வ.எண். 06131) இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையம் சென்றடையும். எதிா்வழித்தடத்தில் திருவண்ணாமலை ரயில் நிலையத்திலிருந்து சனிக்கிழமை (நவ.16) அதிகாலை 3.30 மணிக்குப் புறப்படும் மெமு ரயில் (வ.எண். 06132) காலை 5 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்தடையும்.

இந்த இரு ரயில்களும் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.