பைக் மீது காா் மோதி விபத்து : தம்பதி காயம்
விழுப்புரம் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற தம்பதி பலத்த காயமடைந்தனா்.


விழுப்புரம் அருகே காா் மோதியதில் பைக்கில் சென்ற தம்பதி பலத்த காயமடைந்தனா்.
திண்டிவனம் வட்டம், கீழமங்கலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சேகா் மகன் வேலு(35), கூலித் தொழிலாளி. இவரது மனைவி மலா்விழி(32). இவா்கள் இருவரும் புதன்கிழமை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, பின்னால் வந்த காா் மோதி விபத்து ஏற்பட்டதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற வேலு, மலா்விழி ஆகியோா் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து இருவரும் மீட்கப்பட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த விபத்துக் குறித்த புகாரின்பேரில்,விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...