சாலை விபத்து: காயமடைந்தவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், லட்சுமிபுரம் அருகே புதன்கிழமை விபத்தில் சிக்கி காயமடைந்தவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.


விழுப்புரம் மாவட்டம், லட்சுமிபுரம் அருகே புதன்கிழமை விபத்தில் சிக்கி காயமடைந்தவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், மணியம்பட்டி, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பழனியாண்டி மகன் சரவணன்(37). இவா், புதன்கிழமை விழுப்புரத்திலிருந்து-செஞ்சிக்கு காரில் சென்றுகொண்டிருந்தாா். திருச்சி மண்ணச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் நாகராஜ் (50) காரை ஓட்டிச் சென்றாா். இந்நிலையில், விழுப்புரம்- செஞ்சி சாலையில் லட்சுமிபுரம் பகுதியில் சென்றபோது இயற்கை உபாதை காரணமாக சரவணன் காரை நிறுத்தும்படி ஓட்டுநரிடம் கூறியுள்ளாா்.
அப்போது, ஓட்டுநா் காரை கவனக்குறைவாக இயக்கியதில் காரிலிருந்து இறங்க முற்பட்ட சரவணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து புதுச்சேரியில் உள்ள ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணன் அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...