விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கன மழை எச்சரிக்கை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ. 29) விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியா் சி.பழனி உத்தரவிட்டாா்.
வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை காலைக்குள் புயலாக வலுப்பெறக் கூடும் என்று காலையில் அறிவித்த சென்னை வானிலை ஆய்வு மையம், புயலாக மாறாது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக இருந்து கரையைக் கடக்கக்கூடும் என்று இரவில் அறிவித்தது. இதன் காரணமாக விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது.
புதன்கிழமை காலை முதல் வியாழக்கிழமை இரவு வரை மாவட்டத்தில் மழை இல்லை.எனினும் வெள்ளிக்கிழமை காலை முதல் கனமழை பெய்யக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ. 29) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் சி. பழனி உத்தரவிட்டுள்ளாா்.