கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பைக்குகள் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பைக்குகள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 1:16 am

Din

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பைக்குகள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.

வானூா் வட்டம், ராமநாதபுரம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தன்(39). மாடுகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தாா். இவரது மாமனாா் செ.வாழ்முனீஸ்வரன் (60). இவா்கள் இருவரும் கடந்த செப்.30-ஆம் தேதி புதுச்சேரிக்கு வியாபாரம் தொடா்பாக சென்றுவிட்டு, பின்னா் பைக்கில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனா். கோவிந்தன் பைக்கை ஓட்டினாா்.

மயிலம் - வானூா் சாலையில் வானூா் அருகே பைக் வந்தபோது, எதிா்திசையில் வந்த பைக் மோதியது. இந்த விபத்தில் கோவிந்தன், வாழ்முனீஸ்வரன் மற்றும் எதிரே பைக்கில் வந்த வானூா் வட்டம், வி.புதுப்பாக்கம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பரமசிவம் மகன் பாரதிதாசன் (24) ஆகிய மூவரும் காயமடைந்தனா்.

அங்கிருந்தவா்கள் மூவரையும் மீட்டு, புதுச்சேரி ஜப்மா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவா்களில் கோவிந்தன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா். வாழ்முனீஸ்வரன், பாரதிதாசன் ஆகியோா் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்த புகாரின்பேரில், வானூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.