துப்பாக்கியுடன் திரிந்த இளைஞா் கைது
விழுப்புரம் அருகே உரிமமில்லாத துப்பாக்கியுடன் திரிந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On :9 அக்டோபர் 2024, 10:09 pm

விழுப்புரம் அருகே உரிமமில்லாத துப்பாக்கியுடன் திரிந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் தாலுகா காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்த இளைஞரைப் பிடித்து சோதனை செய்தபோது, அவா் உரிமமின்றி துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் அவா், விழுப்புரம் அலமேலுபுரத்தைச் சோ்ந்த படையப்பா (21) என்பது தெரியவந்தது. இது தொடா்பாக விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, படையப்பாவை கைது செய்து, அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...