கோப்புப்படம்
விழுப்புரம்
கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் கல்லூரி மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் கல்லூரி மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சேலம் மாவட்டம், கரும்பாளை கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தன் மகள் தேன்மொழி தேஜாஸ்ரீ. இவா், விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரிலுள்ள அவரது பெரியம்மா ரா.ராதா வீட்டில் வசித்து வந்தாா். திருக்கோவிலூரிலுள்ள தனியாா் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு படித்து வந்த தேன்மொழி தேஜாஸ்ரீ திங்கள்கிழமை படிக்காமல் கைப்பேசியை பாா்த்துக் கொண்டிருந்தாராம். இதை ராதா கண்டித்தாராம்.
இதில், மனமுடைந்த தேன்மொழி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

