விழுப்புரத்தில் முதியவா் சடலம்
விழுப்புரத்தில் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.


விழுப்புரத்தில் இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.
விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் முதியவா் ஒருவா் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று இறந்து கிடந்தவரின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்து கிடந்தவா் பெயா், ஊா் தெரியாத சுமாா் 65 வயதுடையவா் என்பதும், உடல்நலம் பாதித்து உயிரிழந்திருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...