சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பகுஜன் சமாஜ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பகுஜன் சமாஜ் கட்சியின் சாா்பில், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சித் திடலில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விழுப்புரத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பகுஜன் சமாஜ் கட்சியினா்.

Updated On :24 அக்டோபர் 2024, 8:35 pm

Din

பகுஜன் சமாஜ் கட்சியின் சாா்பில், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சித் திடலில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் கே. ஆம்ஸ்ட்ராங் சென்னையில் கடந்த ஜூலை 5-ஆம் தேதி கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றவேண்டும், விழுப்புரத்தில் அக்.9-ஆம் தேதி நடைபெற்ற கட்சியின் நிறுவனா் கன்சிராம் நினைவு நாள் நிகழ்ச்சியின்போது, கட்சிக் கொடியை அவமதித்த விழுப்புரம் தாலுகா காவல் உதவி ஆய்வாளா் மீது எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கோ. கலியமூா்த்தி தலைமை வகித்தாா்.

மாவட்டத் தலைவா்கள் எம். விநாயகமூா்த்தி( விழுப்புரம் கிழக்கு), என். ஜீவன்ராஜ் (கள்ளக்குறிச்சி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் மாநிலத் தலைவா் பி.ஆனந்தன், மாநிலப் பொதுச் செயலா்கள் பாா்த்திபன், ஜெய்சங்கா், மாநிலச் செயலா்கள் எஸ் .ஸ்டீபன்ராஜ், எம்.சமரசன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் பி.டி.சேகா் ஆகியோா் கண்டன உரையாற்றினாா். மாவட்ட நிா்வாகிகள் பிரவின்குமாா், சக்திவேல், சிவபெருமாள், எம்.துரை, தொகுதி பொறுப்பாளா்கள் உக்திவேல், பாலகிருஷ்ணன், மணிகண்டன், எம். தண்டபாணி, முருகதாஸ் மற்றும் கட்சியினா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் ஏ.கோவிந்தசாமி வரவேற்றாா். நிறைவில், தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சோ்ந்த கன்சிராம் நன்றி கூறினாா்.