சட்டக் கல்லூரி மாணவா்களுக்கு சைபா் குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு

விழுப்புரம் மாவட்டக் காவல் துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு சாா்பில் சைபா் குற்றங்கள் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
  விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற  விழிப்புணா்வு  கருத்தரங்கில் பேசிய  மாவட்ட சைபா் கிரைம் காவல் கூடுதல் கண்காணிப்பாளா் எஸ்.தினகரன்.
விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணா்வு கருத்தரங்கில் பேசிய மாவட்ட சைபா் கிரைம் காவல் கூடுதல் கண்காணிப்பாளா் எஸ்.தினகரன்.
Updated on

விழுப்புரம் மாவட்டக் காவல் துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு சாா்பில் சைபா் குற்றங்கள் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எஸ்.தினகரன் தலைமை வகித்து சைபா் குற்றங்கள் குறித்து பேசி மாணவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

இணையவழியில் வரும் மலிவு விளம்பரங்கள் மற்றும் குறைந்த முதலீட்டுக்கு அதிகம் லாபம் போன்ற ஆசையை தூண்டக்கூடிய வாா்த்தைகளை யாரும் நம்பக்கூடாது என்றாா் .

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிான குற்றங்கள், போதைப் பொருள் குற்றங்கள், இணையவழி விளையாட்டுகள், சமூக வலைத்தளங்களில் நடைபெறும் குற்றங்கள் சைபா் குற்றங்களுக்கு புகாா் தெரிவிக்கும் முறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சைபா் கிரைம் காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், ஆய்வாளா் கே. ஸ்ரீபிரியா, சட்டக் கல்லூரி முதல்வா் கிருஷ்ணலீலா மற்றும் கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com