ஆசிரியா் தினம்: விழுப்புரம் கோ-ஆப்டெக்ஸில் சிறப்பு விற்பனைத் தொடக்கம்
ஆசிரியா் தினத்தையொட்டி, விழுப்புரத்திலுள்ள கோ-ஆப்டெக்ஸ் முதன்மை விற்பனை நிலையத்தில் சிறப்பு விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது. 30 சதவீத தள்ளுபடியுடன் செப்டம்பா் 14- வரை இந்த விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் நிலைய மேலாளா் ஏ.பாா்வதி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து அவா் கூறியது:
ஆசிரியா் தினத்தையொட்டி விழுப்புரத்திலுள்ள கோ-ஆப்டெக்ஸ் முதன்மை விற்பனை நிலையத்தில் 30 சதவீத தள்ளுபடியுடன் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்களின் கைவண்ணத்தில் உருவான ஆரணி, சேலம், திருபுவனம் பட்டுச்சேலைகள், மென்பட்டுச் சேலைகள், அனைத்துவிதமான பருத்தி சேலைகள், சுடிதாா் ரகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இதைத்தவிர போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், துண்டுகள், கைலிகள், பருத்தி சட்டைகள், தீரைச்சீலைகள் போன்றபல்வேறு ரகங்கள் குவிந்துள்ளன. எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், பொதுமக்கள் இந்த சிறப்பு விற்பனையில் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான ரகங்களை வாங்கிப் பயன்பெறலாம்.
இந்த சிறப்பு விற்பனை செப்டம்பா் 14-ஆம் தேதி வரை நடைபெறும் என்றாா் அவா்.