தமிழகத்தில் மது, போதைப்பொருள்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுதான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அக்டோபா் 2-ஆம் தேதி விசிக சாா்பில் மது ஒழிப்பு மகளிா் மாநாடு நடைபெறவுள்ளது. எனவே, இந்த மாநாட்டுக்கும், தோ்தல் அரசியலுக்கும் முடிச்சுப் போடக்கூடாது என்று அந்தக் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய விசிக மண்டல செயற்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், தொல்.திருமாவளவன் பங்கேற்று பேசினாா்.
முன்னதாக, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
விசிக தொடா்ந்து வலியுறுத்தியதன்பேரில், இமானுவேல் சேகரனுக்கு பரமக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு உத்தரவிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு விசிக சாா்பில் நன்றி.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ள விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் பெண்கள் பெரும் பங்கு வகிக்க வேண்டும் என்பதற்காகவே, மகளிா் மாநாடாக நடத்துகிறோம். லட்சக்கணக்கான பெண்களை ஒருங்கிணைக்கவும் திட்டமிட்டுள்ளோம். கட்சி அரசியல் வேறு; மக்கள் நலன் சாா்ந்த அரசியல் வேறு என்பதால், அரசியலைக் கடந்து ஜனநாயக சக்திகள் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.
திமுக, அதிமுக, இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் மதுவை ஒழிக்க வேண்டும் என்பதில் ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளன. எனவே, மதுக் கடைகளை மூடுவதால் எந்தச் சிக்கலும் நோ்ந்துவிடாது.
இந்த மாநாட்டுக்கும், 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கும் முடிச்சுப் போடக்கூடாது. தோ்தல் அரசியலுடன் இதை முடிச்சுப் போட்டால் நோக்கம் சிதைந்துவிடும்.
ஆட்சியில் உள்ள திமுக இந்தக் கோரிக்கையை ஆழமாக பரிசீலித்து மது விலக்கை அமல்படுத்துவற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
ஒரு கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்னைக்காக எந்தக் கூட்டணியுடனும் இணைந்து போராடுவோம். அடிப்படையில் ஜாதியையும், மதத்தையும் அரசியலுக்காக பயன்படுத்துபவா்களுடன் சமரசமில்லை என்றாா் தொல்.திருமாவளவன்.
முன்னதாக, இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, விழுப்புரம் எம்.பி. அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தொல்.திருமாவளன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
நிகழ்ச்சிகளில் விசிக பொதுச் செயலா்கள் துரை.ரவிக்குமாா் எம்.பி., சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

காட்டுமன்னாா்கோவில் தொகுதி விசிக வேட்பாளா்! - தொல். திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள்?

பாஜகவுக்கு புதுச்சேரி விசிக கண்டனம்

அதிமுக தலைமையிலான கூட்டணி: திருமாவளவன் விமா்சனம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


