சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

லாரியில் கடத்திவரப்பட்ட மதுப் புட்டிகள் பறிமுதல்: ஓட்டுநா் கைது

விழுப்புரம் அருகே லாரியில் கடத்திவரப்பட்ட புதுவை மாநில மதுப் புட்டிகளை மாவட்ட மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, ஓட்டுநரை கைது செய்தனா்.

Updated On :11 செப்டம்பர் 2024, 10:45 pm

விழுப்புரம் அருகே லாரியில் கடத்திவரப்பட்ட புதுவை மாநில மதுப் புட்டிகளை மாவட்ட மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, ஓட்டுநரை கைது செய்தனா்.

விழுப்புரம் எஸ்.பி. தீபக் சிவாச் உத்தரவின்பேரில், விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு உதவி ஆய்வாளா் வேதரத்தினம் தலைமையிலான போலீஸாா் பனையபுரம் சோதனைச் சாவடியில் புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, லாரியில் புதுவை மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட மதுப் புட்டிகள் அட்டைப் பெட்டிகளுக்குள் இருந்தது தெரியவந்தது.

தொடா்ந்து, லாரி ஓட்டுநரைப் பிடித்து விசாரித்ததில், சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை வட்டம், எழவன்கோட்டை, பனந்தோப்பைச் சோ்ந்த ஜோன்ஸ் மகன் சந்தோஷ் (32) என்பதும், இவா் புதுச்சேரி பகுதியிலிருந்து மதுப் புட்டிகளை லாரியில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, சந்தோஷை கைது செய்து, லாரியில் கடத்திவரப்பட்ட சுமாா் ரூ.10,896 மதிப்பிலான 244 மதுப் புட்டிகள், லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.