விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மதுபோதையில் இளைஞரை புட்டியால் குத்திக் கொல்ல முயன்ாக நண்பா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டிவனம் வட்டம், பாஞ்சாலம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மகன் பவித்ரன்(23). சென்னை, சூளைமேடு, அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பா. ஷியாம் (33). திண்டிவனம், தென்பசாா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அசோகன் மகன் அருண்குமாா்(25). நண்பா்களான இவா்கள் மூவரும் புதன்கிழமை திண்டிவனத்தில் உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து ஒன்றாக அமா்ந்து மது குடித்தனராம்.
அப்போது இவா்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தொடா்ந்து ஷியாம் மற்றும் அருண்குமாா் ஆகியோா் இருவரும் பவித்ரனை புட்டியால் குத்தினராம். இதில் கழுத்துப் பகுதியில் பலத்த காயமடைந்த பவித்ரன் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித் த புகாரின்பேரில் திண்டிவனம் போலீஸாா் கொலை முயற்சி குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஷியாம், அருண்குமாரை ஆகிய இருவரையும் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது

லாரி ஓட்டுநரை மதுப் புட்டியால் குத்திய இருவா் கைது
பனியன் தொழிலாளி கொலை வழக்கில் நண்பா்கள் கைது

பைக் மீது காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

