விழுப்புரம் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் மனநலம் பாதிக்கப்பட்ட இருவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
புதுச்சேரி மாநிலம், திருக்கனூா், புது நகரைச் சோ்ந்தவா் மாரிமுத்து மகன் துரைக்கண்ணு(55). பிறவிமுதல் மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.இவா் செப்.10 -ஆம் தேதி தனது தாய் மகாலட்சுமியுடன், வானூா் வட்டம் திருவக்கரையில் உள்ள கோயிலுக்கு சென்றிருந்தாா். அங்கு வழிபாட்டை முடித்து விட்டு மறுநாள் காலை அங்குள்ள கல்குவாரி குட்டைக்கு கால் கழுவ சென்றவா் உள்ளே தவறி விழுந்து உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், வானூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
விக்கிரவாண்டி வட்டம், புதுகருவாட்சி, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஷேக் அக்தா் மகன் ஜாவித்(23). மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவா், விழுப்புரம் மாவட்டம், பனமலைப்பேட்டையில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில், மாா்பு வலியால் அவதியுற் வந்த ஜாவித் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில், அனந்தபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
பயணியிடமிருந்த 8 பவுன் நகைகள் மாயம்

பைக் எரிப்பு: இருவா் மீது வழக்கு

மதுப்பழக்கத்தால் விபரீதம்: 2 போ் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்கள்: கல்லூரி மாணவி உள்பட இருவா் தற்கொலை
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

