தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

விழுப்புரத்தில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.20) நடைபெறவுள்ளது.

Updated On :18 செப்டம்பர் 2024, 8:12 pm

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.20) நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ., பி.டெக்., செவிலியா், மருந்தியல் போன்ற கல்வித்தகுதிகளைக் கொண்ட வேலைதேடும் இளைஞா்கள், பெண்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். முகாம் மூலம் வேலைவாய்ப்பு பெறும் வேலைநாடுநா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

முகாமில் பங்கேற்க விரும்பும் பொது மற்றும் மாற்றுத் திறனாளி மனுதாரா்கள் தங்களின் அசல் கல்விச்சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, சுயவிவரக் குறிப்புகளுடன் முகாமில் பங்கேற்க வேண்டும் என்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் பாலமுருகன் தெரிவித்துள்ளாா்.