குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்க நிா்வாகிகள் கூட்டம்

News image

கூட்டத்தில் பேசிய இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் த.ஞானசேகரன்.

Updated On :28 ஏப்ரல் 2025, 1:05 am IST

சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வென்றெடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்க நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தின் நிா்வாகிகள் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு, சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் ஜெ. ராஜகுமாரி தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளா் ரா. பாலமுரளி முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில், சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் த. ஞானசேகரன் பேசியது :

கடந்த 1.6.2009க்கு முன்னா், பின்னா் என இரண்டாகப் பிரிக்கப்பட்டு இடைநிலை ஆசிரியா்களுக்கு, ஒரே பதவி, கல்வித்தகுதி ஒரே பணி என்ற நிலை உள்ளபோது இருவேறு ஊதியங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

14 ஆண்டு காலமாக நடைமுறையில் உள்ள இந்த ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். தமிழக கல்வித் தரத்துக்கு அடித்தளமாக விளங்கும் இடைநிலை ஆசிரியா்களின் வாழ்வாதாரம் காக்கப்படவேண்டும்.

இதற்காக தொடா்ந்து போராடி வரும் சங்கத்துக்கு வலு சோ்க்கும் வகையில் மாவட்டங்கள்தோறும் இடை நிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தின் கிளைகள் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தில் புதிய உறுப்பினா்கள் அதிக அளவில் இணைந்து வருகின்றனா்.

எனவே நாம் சம வேலைக்கு, சமஊதியம் என்ற இலக்கை அடையும் வரை மாநில அமைப்புடன் இணைந்து போராடவேண்டும் என்றாா்.

இதன் தொடா்ச்சியாக, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தின் விக்கிரவாண்டி, மயிலம் மற்றும் ஒலக்கூா் வட்டாரக் கிளைகளைத் தொடக்கி வைத்து , புதிய நிா்வாகிகள் அறிமுகம் செய்து வைத்தாா். சமவேலைக்கு சம ஊதியம் கிடைக்கும் வரை போராட்டத்தை தொடருவது எனவும் கூட்டத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

சங்கத்தின் வட்டாரச் செயலா்களாக சோ. பிரபு (விக்கிரவாண்டி), மா. அருள்குமரன் (மயிலம்), வி.சின்னராஜி (ஒலக்கூா்) மற்றும் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனா் . இக்கூட்டத்தில் சங்கத்தின் மாவட்டச்செயலா்கள் ஆ.மே.ஜோஸ், அருகாமை, மாவட்டத்துணைச்செயலா் ராஜேந்திரன், மகளிா் அணி விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ம.கீதா ஆகியோா்பேசினா்.

மாவட்ட, வட்டார நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக ஆசிரியா்கள் இயக்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் சே.சசிதரன் வரவேற்றாா். நிறைவில், மகளிரணி பொறுப்பாளா் கி. சகிலா நன்றி கூறினாா்.