வெந்நீரில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

மரக்காணத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, வெந்நீரில் தவறி விழுந்து காயமடைந்த குழந்தை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
Published on

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, வெந்நீரில் தவறி விழுந்து காயமடைந்த குழந்தை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

மரக்காணம் வட்டம், நடுக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ந.காளிதாஸ். இவரது மகன் தக்ஷன் (2). குழந்தை தக்ஷன் டிச.18- ஆம் தேதி விளையாடிக் கொண்டிருந்தபோது, வீட்டில் விறகு அடுப்பில் வைத்திருந்த வெந்நீரில் தவறி விழுந்து விட்டாராம்.

இதில் பலத்த காயமடைந்த தக்ஷனை, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா் சிகிச்சையில் இருந்து வந்த தக்ஷன், திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com